வெள்ளச்சி நாச்சியார்
சிவகங்கை சீமை இளவரசி
வெள்ளஞ்சி நாச்சியார் (1764 - 1790 )
மன்னர் முத்துவடுகநாத தேவருக்கும் அரசி வேலுநாச்சியாருக்கும் 1764ல் பொக்கிஷமாக பிறந்தவர்...
நாளொரு மேனியும் பொழு வண்ணமுமாய் அரண்மனையை சுற்றி வந்தார்...
விடுதலை போர் சமயம் என்பதால் இராணி வேலுநாச்சியாரும் மகள் வெள்ளஞ்சி நாச்சியாரும் கொல்லங்குடி அரண்மனையில் தங்கியிருந்தனர்...
வெள்ளையர்களிடம் நடைபெற்ற போரில் தந்தை முத்துவடுகநாதர் 1772 காளையார் கோவில் போரில் சூழ்ச்சியால் கொல்லபட்டார்...
மன்னரின் மறைவு செய்தியை கேட்ட வேலுநாச்சியார் போர்களம் புக தயாராகினார் ஆனால் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் அறிவுறுத்தல்களின் படி மற்றும் தனது 8 வயது குழந்தை வெள்ளச்சி நாச்சியாருக்காக விருப்பாச்சிக்கு தப்பி சென்றார்....
7 ஆண்டுகளாக விருப்பாச்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டை, அய்யம் பாளையம் கோட்டை என வெள்ளஞ்சி நாச்சியார் பாதுகாக்கபட்டார்...
1780 ல் மீண்டும் சிவகங்கை வேலுநாச்சியார், மருதிருவர்கள் , ஹைதர் அலியினால் கைப்பற்றபட்டபோது சிவகங்கை கோட்டைக்குள் வெள்ளச்சி நாச்சியாரும் தாயார் வேலுநாச்சியாரும் மக்களின் ஆராவாரத்துடன் வந்தனர்...
1780 ல் மிகவும் எளிமையான முறையில் வெள்ளச்சி நாச்சியாருக்கு முடி சூட்டபட்டது...
1782 ல் வெள்ளஞ்சி நாச்சியார் பெயரில் தர்மம் செய்த செப்பு பட்டயங்கள் சிவகங்கை சமஸ்தான பதிவேடுகளில் உள்ளது....
படமாத்தூர் கௌரி வல்லப தேவருக்கு இரண்டாவதாக மணமுடிக்க விரும்பாத அரசி வேலுநாச்சியார் பிராதானியர்கள் பார்த்த வேங்கண் பெரிய உடைய தேவருக்கு 1783 ல் மணமுடித்து வைத்தார்...
இவருக்கு குழந்தை நாச்சியார் என்ற மகளும் பிறந்தார்...
தாயை போன்ற வீர வாழ்வு இல்லையென்றாலும் நாட்டுக்காக தங்கள் வாழ்வை அர்பனித்த பொற்றோரின் பெருமையுடன்
1790 ல் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மகள் குழந்தை நாச்சியாரும் மரணமடைந்தனர்...
ஆதாரங்கள்...
***************
தினமணி நாளிதழ் டிசம்பர் 24 1999...
காளையார் கோவில் மலையீட்டு செப்பேடு...
வேலுநாச்சியார் அறக்கொடை செப்பேடு...
சீர்மிகு சிவகங்கை சீமை வரலாற்று புதினம்...
சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்...
Comments
Post a Comment